என்னப்போல தான் இவரும் போலிருக்கு....எனிவே நன்றி ஜெயா பாரதி
பிகாஸ்
படித்ததில் பிடித்ததை பிறருடன் பகிர்தளினால்
 | படித்ததில் பிடித்தது
எண்ணங்களின் வலிமை:
நிக் ஒரு ஆரோக்கியமான , வலிமையான, இளைமையான ரயில் ரோடு போடும் தொழிலாளி . கடின உழைப்பாளி என்று பெயர் எடுத்தவர். அவருக்கு ஒரு அன்பான மனைவியும், இரண்டு குழந்தைகளும் , பல நண்பர்களும் இருந்தனர்.
ஒரு வெயில்காலம் மத்தியான வேளையில், போர்மேனுடைய பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். கடைசி நேர சரிபார்த்தலின் பொழுது , ஒரு குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக அடைபட்டு விட்டார். உடன் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் சென்று விட்டனர் என்று புரிந்தவுடன் அவரது பயம் அதிகரித்தது.
கதவை கைகளில் இரத்தம் வரும் வரை தட்டி பார்த்தார், தொண்டை தண்ணி வற்றும் வரை கத்தி பார்த்தார். ஒருவரும் வரவில்லை. எண்கள் மற்றும் அவரது தொழில் அறிவை வைத்து அங்குள்ள தட்ப வெப்ப நிலை ஜீரோ டிகிரி என்று கணக்கிட்டார்.
நிக்கின் மனதில் ஓடியது" இங்கிருந்து வெளியே போகாவிட்டால், நான் இங்கேயே உறைந்து இறந்து விடுவேன். " அப்படி இறந்துவிட்டால் தன் மனைவிக்கும் , குடும்பத்தாருக்கும், என்ன நடந்தது என்பதை தெரியப்படித்த வேண்டும் என்று நினைத்து கையிலிருந்த கத்தியை எடுத்து மரத்தாலான தரையில் எழுதினார். அவர் எழுதியது"மிகவும் குளிர்கிறது, என்னுடைய உடல் விறைக்க தொடங்கி விட்டது. என்னால் தூங்க முடியுமானால், இதுவே என்னுடைய இறுதி வார்த்தைகள். "
அடித்த நாள் காலை, வேலை செய்பவர்கள் வந்து கதவுகளை திறந்து பார்த்தார்கள், நிக் இறந்திருந்தார். பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய உடலில் குளிரினால் உறைந்துபோய் இறந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. ஆனால் குளிர்சாதன பெட்டியை சோதித்து பார்த்ததில், குளிர்சாதன கருவி வேலை செய்யவில்லை, உள்ளே வெப்பம் 55 டிகிரி fahrenheit இருந்தது. நிக் தனது எண்ணங்களின் வலிமையாலே தன்னை தானே கொன்று விட்டார்.
எண்ணங்கள் வலிமையானவை. நாமும் கவனமாக இல்லாவிட்டால், நம்மை பற்றி நாம் குறைவாக மதிப்பிட்டு அதை தினமும் எண்ணி கொண்டிருந்தோமானால், அவை நம்முடைய கனவுகளை நனவாக்ககூடிய இயற்கையான திறமைகளை மெல்ல சாகடித்துவிடும்.
நன்றி: The success principles - jack canfield .
வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக