வெள்ளி, 22 ஏப்ரல், 2011

ப்பூ...இவ்வளவுதானா,இதற்காகவா?







எத்தனையோ பேர் மாவீரன் அலெக்சாண்டர் மாதிரி நாடு 
பிடிக்க ஆசைப்பட்டார்கள்,பிடித்தார்கள்.ஆனால் அவர்களும் அவனைப்போலவே வெறும் கையனாகப் போய் சேர்ந்தார்கள்.

எல்லோருமே அவ்விதமாகத்தான் மரணிக்கின்றார்கள்.
மரணத்தின் விளிம்பில் ஏற்படும் ஞானோதயம் அர்த்தமற்றது.
அது வாழ்க்கையின் நடுப்பகுதியில்வரவேண்டும்.
'ப்பூ...இவ்வளவுதானா,இதற்காகவா?'என்று மனம் உணர வேண்டும்.

ஆறு நிறைய தண்ணீர் ஓடுகிறது.உங்கள் கையில் ஏந்தியது எவ்வளவு?கடைசியில் அந்த கையாளவும் மிஞ்சுகிறதா என்ன?எத்தனை காலம் வாழ்ந்தாலும் வெறும் கையளவாகத்தான் வீடு திரும்புவோம்.காரணம் இது உபயோகமற்ற வாழ்க்கை.இந்த வாழ்க்கை மீது ஏற்படும் விரக்தியில்தான் ஞானம் பிறக்கிறது.

அப்போது தொடங்குவதுதான் அகமுகப் பயணம்.
இங்கே வெற்றியும் தோற்கிறது.தோல்வியும்
தோற்கிறது.எல்லாமும் தோற்கிறது.மரணத்தை தவிர!

பிச்சைகாரனோ, அரசனோ,முட்டாளோ,அறிஞனோ மரணம் எல்லோருடைய வாழ்க்கையும் முற்றாக துடைத்து போடுகிறது.

மரணம் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிடும் என்கிறபோது பற்று எதற்காக?நாம் சரீரத்தின் மீதும்,பந்தத்தின் மீதும்,
சொத்துசுகங்களின் மீதும் பற்றுவைக்காமல் இருப்போமேயானால் மரணம் நம்மிடம் இருந்து எதை கொண்டுபோக முடியும்?

இந்த பற்றற்ற நிலைதான் சந்யாசம்.

நன்றி 
புதுமைபித்தன் 
முகநூல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக